
தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன்
செப் 09, 2025
Advertisement
தமிழில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கத்தில் வெளியான படம் "டூரிஸ்ட் பேமிலி". முதல் படத்திலேயே இவர் வெற்றி முத்திரையை பதித்தவர். சமீபத்தில் அபிஷன் ஜீவ்னித் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்குகிறார் என அறிவித்தனர். இதில் கதாநாயகியாக மலையாள சினிமாவின் இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் நடிக்கின்றார். இந்த படத்தை சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று அனஸ்வரா ராஜன் பிறந்தநாள். இதை தனது முதல் தமிழ் படக்குழுவினருடன் கொண்டாடி உள்ளார் அனஸ்வரா. மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான இவர் இப்போது இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!