
8 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் லாவண்யா
அன்னை பிலில் புரொடக்சன் தயாரிப்பில் எம். ஜான் பீட்டர் இந்த படத்தை தயாரித்துள்ளார். ரவீந்திர மாதவா இயக்கி உள்ளார். ஷாரா, பாரத், லட்சுமி பிரியா மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறும்போது, "நிறைய ஆக்ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுப்பூர்வமான கதையாக "தணல்" இருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத இரண்டு நபர்களைப் பற்றிய கதை இது. வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு, பழிவாங்கும் கோபத்தில் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வேதனையான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இவர்களை சுற்றி கதை இருக்கும்" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!