
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் கூலி
ஓடிடியில் இப்படம் செப்டம்பர் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், தியேட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக நாளை வரை இந்தப் படம் தாக்குப் பிடிக்கும், அதற்குப் பிறகு சுத்தமாக வரவேற்பு இருக்காது என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த "ஜெயிலர்" படத்தின் வசூலை இப்படம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அந்த வசூலை "ஜெயிலர் 2" தான் வந்து முறியடிக்கும் போலிருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!