
பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர், சிவாஜியின் ஆஸ்தான வசனகர்த்தா
வீரபாண்டிய கட்டபொம்மன், குங்குமம், கர்ணன், தங்க சுரங்கம், சொர்க்கம், தர்மம் எங்கே, பொன்னுஞ்சல், என்னைப்போல் ஒருவன், புண்ணிய பூமி உள்ளிட்ட பல சிவாஜி படங்களுக்கு வசனம் எழுதினார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம், பணம் படைத்தவன், எங்க வீட்டு பிள்ளை, பறக்கும் பாவை உள்ளிட்ட பல எம்ஜிஆர் படங்களுக்கு வசனம் எழுதினார்.
எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த "எங்க வீட்டு பிள்ளை" திரைப்படத்திற்கு வசனம் எழுதியதை போல் பின்னாளில் சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்த "என்னைப்போல் ஒருவன்" திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். வசனங்களுக்காகவே புகழ்பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் படங்களுக்கு வசனம் எழுதியவரும் இவரே.
தஞ்சாவூர் கலியபெருமாள் கிருஷ்ணசாமி, த.க.கிருஷ்ணசாமி என்று சுருக்கமாக அழைக்கப்பட்டார். 1950களில் தொடங்கி நாடங்களுக்கு வசனம் எழுதி பின்னர் திரைப்படங்களுக்கு எழுதினார். சினிமாவுக்கு முன்னதாக சக்தி நாடக சபா என்ற நாடக குழுவை நடத்தி வந்தார். இந்த குழுவின் ஆஸ்தான நடிகராக இருந்தார் சிவாஜி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!