
ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் ருக்மணி வசந்த் : ரகசியம் உடைத்த மதராஸி தயாரிப்பாளர்
மேலும் தெலுங்கில் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் படத்திலும் ருக்மணி வசந்த் தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற மதராஸி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் பேசும்போது, ருக்மணி வசந்த் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற ரகசியத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ லீலா போல வரும் நாட்களில் ரசிகர்களை ருக்மணி வசந்த் ஜுரம் பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!