
தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி
இந்நிலையில் படவா கோபி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛மனிதர்கள் மீதான அன்பிலும், நாய்கள் மீதான அன்பிலும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நோக்கத்தில் தான் என் வீட்டு கல்யாண வேலைக்கு மத்தியிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். ஆனால், நான் நினைத்தது வேறு, அங்கு நடந்தது வேறு. நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து எனக்கு தெரியாது. என் கருத்தை முழுமையாக நிகழ்ச்சியில் தெரிவிக்கவே விடவில்லை. நீங்கள் எல்லோரும் பார்த்தது எடிட் செய்யப்பட்ட எபிசோடு. அப்படி போடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முடிந்தால் அந்த நிகழ்ச்சியின் எடிட் செய்யப்படாத வீடியோவை போடச் சொல்லுங்கள் அப்போது நான் பேசியது புரியும். பொது மக்கள் யாரும் என்னை தவறாக நினைத்துவிடாதீர்கள். நான் பேசியது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. என்னுடைய கருத்துகள் அப்படி புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்"".
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய படவா கோபி, ‛‛இரவு 9 மணிக்கு மேல் வெளியே செல்லாதீர்கள், நாய் குறைக்கும்"" என கூறியிருந்தார். இதை வைத்து அவரை நிறைய பேர் டிரோல் செய்தனர். இந்தச்சூழலில் தான் அவர் வீடியோ வெளியிட்டு விளக்கத்துடன் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!