
ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது?
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது "மை லார்ட் " கதைக்களம் குறித்து ராஜூ முருகன் ஒரு பேட்டியில் கூறியதாவது , " ஒரு தம்பதி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தினால், அவர்கள் கையில் உள்ள ரேஷன் கார்டையும் பறித்து, எங்கையோ கொண்டு நிறுத்தினால் அவர்கள் என்ன பண்ணுவார்கள் என்பதை பற்றியது தான் படம். இயற்கை உங்களுக்கு தந்த பெயர் மனுஷன், மனுஷி. பெத்தவங்க வெச்ச பெயர் ஒண்ணு. ஆனால், உணர்ச்சிகளே இல்லாத ஒரு சிஸ்டத்துக்கு நீங்க வெறும் நம்பர், டோக்கன், ஓட்டு அவ்வளவு தான். ஆனால், அந்த நம்பரோ, டோக்கனோ, ஓட்டோ திருப்பி நின்னு ஒண்ணு பண்ணுனா அதுதான் மை லார்ட் படம்" என தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!