
பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம்
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயன்றபோது மிதுன் சக்ரவர்த்தி அளவிற்கு ஆடுகிற ஹீரோ இல்லை. கமல்ஹாசன் இருந்தார் ஆனால் அவருக்கு டிஸ்கோ நடனத்தில பயிற்சி இல்லை. அப்போது கல்லூரி மேடைகளில் ஆடிக் கொண்டிருந்த நாகேஷ் மகன் ஆனத்பாபுவை கண்டுபிடித்து நடிக்க வைத்தனர். படத்திற்கு "பாடும் வானம்பாடி" என்று தலைப்பு வைத்தனர். உண்மையில் மிதுன் சக்ரவர்தியை விட பிரமாதமாக ஆடி தமிழ் சினிமாவில் நடிகராக தடம் பதித்தார் ஆனந்த் பாபு.
இந்த படம் வெளிவந்த பிறகு தமிழ்நாடு முழுக்க டிஸ்கோ பைத்தியம் பிடித்தது. "நான் ஒரு டிஸ்கோ டான்சர்" பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. வளையல் கடைகளில் டிஸ்கோ வளையல், டிஸ்கோ பொட்டு, டிஸ்கோ ரிப்பன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். ஆண்கள் டிஸ்கோ கட்டிங் செய்து வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் வலம் வந்தார்கள். . டிஸ்கோ சாந்தி என்கிற பெயரில் நடிகையையும் வந்து சேர்ந்தார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!