
சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ‛‛பாலகிருஷ்ணா என்றாலே பாசிட்டிவிட்டி தான். அவர் பேசும் பன்ச் வசனங்களை அவரை தவிர வேறு யார் பேசினாலும் சிறப்பாக இருக்காது. பாலையா எங்கு இருந்தாலும் சிரிப்பும், மகிழ்ச்சியும் இருக்கும். அவருக்கு போட்டி அவர் தான். அவர் படம் நன்றாக ஓடுகிறது என்றால் அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அதுவே அவரது பலம். சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துகள்"" என தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!