
ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன்
இந்நிலையில் ஜெயிலர் -2 படம் குறித்து ஒரு விழாவில் இயக்குனர் நெல்சன் கூறும்போது, ‛‛ஜெயிலர் படத்தைப் போலவே ஜெயிலர் 2 படமும் மிகச் சிறப்பாக வந்துள்ளது. என்றாலும் இந்த படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று இப்போதே என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இருக்கும். முக்கியமாக இப்போதே ஜெயிலர் 2 படம் குறித்து ஓவராக ஹைப்பை ஏற்றி பேச விரும்பவில்லை. ஏற்கனவே ஜெயிலர் 2 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நேரத்தில் நானும் இன்னும் ஹைப்பை ஏற்றும் வகையில் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். அப்படி நானும் பேசினால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து விடும்"" என்று கூறினார் .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!