ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன்
Advertisement
Advertisement
ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன்
ஆக 31, 2025
அ நிறம் | அளவு
Advertisement
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் "ஜெயிலர்". இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது. ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் இடம் பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்து வருகின்றனர். இவர்கள் அல்லாமல் முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவராஜ் குமார் மற்றும் மோகன்லாலும் இந்த பாகத்திலும் தொடர்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து இந்த படத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலன் இணைந்துள்ளார். இதனை படக்குழு சர்ப்ரைஸ் ஆக வைத்துள்ளனர். வித்யாபாலன் பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வந்தாலும் தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!