
தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள "பைசன்", சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடித்துள்ள "டீசல்", விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கிரித்தி ஷெட்டி நடித்துள்ள "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி", கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடித்துள்ள "டுயூட்", ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடிக்கும் "கார்மேனி செல்வம்" ஆகிய படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள இரண்டு படங்களான "லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி" மற்றும் "டுயூட்" ஆகிய இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படம்தான் அன்றைய தினத்தில் வெளியாகும். மற்றொன்று தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. ஆனாலும், அது பேச்சு வார்த்தைக்குப் பிறகே முடிவாகும். இந்த 5 படங்களுடன் தீபாவளி வெளியீடு நிற்குமா அல்லது மேலும் சில படங்கள் போட்டியில் சேருமா என்பது போகப் போகத் தெரியும்.
ஒவ்வொரு படமும் வெளியீட்டிற்கு முன்பாக ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் இல்லை என்றாலும் இந்தப் படங்களுடன் இந்த வருட தீபாவளி கொண்டாட்டம் சினிமாவில் சிறப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!