
விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம்
இந்த நிகழ்வில் சினிமாகாரர்கள் கலந்துகொள்ளவில்லை. இரு வீட்டை சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நவம்பர் மாதம் அல்லது நடிகர் சங்க புது கட்டடம் திறக்கப்பட்ட அடுத்த முகூர்த்தத்தில் நடிகர் சங்க கட்டடத்தில் விஷால் தன்சிகா திருமணம் நடக்க உள்ளது.
விஷால் வீட்டில் இது 4வது காதல் திருமணம். அவர் அப்பா ஜி.கே.ரெட்டி, அம்மா ஜானகி தேவி இருவருமே அந்த காலத்திலேயே காதல் திருமணம் செய்தவர்கள். விஷால் அப்பா அரசுப் பணியில் இருந்தவர், பின்னர் கிரனைட் பிஸினஸ், சினிமா தயாரிப்பாளர் என மாறியவர்.
சினிமா தயாரிப்பாளர், நடிகராக இருந்த விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா, நடிகை ஷ்ரியா ரெட்டியை காதல் திருமணம் செய்தார். விஷால் தங்கை ஐஸ்வர்யா, கிரிஷ் திருமணமும் காதல் திருமணம்தான். அந்தவகையில் அவர் வீட்டில் இது 4வது காதல்.
இப்போது ரவி அரசு இயக்கத்தில் மகுடம் படத்தில் நடித்து வரும் விஷால், அதற்கடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். யோகிடா என்ற படத்தில் அதிரடி போலீசாக நடித்து இருக்கிறார் தன்ஷிகா. அந்த படம் விரைவில் வரப்போகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!