
ரிலீஸ் தேதி குழப்பத்தில் கருப்பு : காத்திருக்கும் ரசிகர்கள்
இடையில் வெளிவந்த ஓடிடி ரிலீஸ் படங்களான "சூரரைப் போற்று, ஜெய் பீம்" ஆகிய படங்கள்தான் சூர்யாவுக்கு பேர் சொல்லும் படங்களாக அமைந்தன. "சூரரைப் போற்று" படம் 5 தேசிய விருதுகளை வென்றது. சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
சூர்யா தற்போது நடித்து வரும் "கருப்பு" படம் எப்படியும் தீபாவளிக்கு வெளிவந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், படத்தின் வேலைகள் முடிவடைவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இயக்குனர் பாலாஜியும் இன்னும் சில காட்சிகளை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கிறாராம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அதற்கு சம்மதிக்கவில்லை என்கிறார்கள்.
எடுக்கப்பட்ட காட்சிகளைப் போட்டுப் பார்த்ததில் மிகவும் திருப்தியாம். படம் வேற லெவலில் வந்திருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். பல படங்களாக மாபெரும் வெற்றிக்குக் காத்திருந்த சூர்யாவுக்கு இந்தப் படம் அப்படி ஒரு வெற்றியைத் தரும் என்கிறார்கள். தீபாவளி வெளியீடு இல்லை என்றால் அடுத்து எப்போது என்ற கேள்வியும் எழுகிறது. பொங்கலுக்கு "ஜனநாயகன்" வருவதால் அதனுடன் போட்டியிட வாய்ப்பில்லை. எல்லாம் கூடிப் பேசி ஒரு சரியான இடைவெளியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!