
பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார்
அவரது அடுத்த படம் "விசப்பிட்டடே வலி". இந்த படத்தில் அவருடன் நடித்தவர் அவருக்கு முன் மலையாள சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டராக இருந்த திக்குரிசி சுகுமாரன். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அப்துல் காதர் என்ற பெயர் சினிமாவிற்கு பொருத்தமா இல்லை என்று கூறி பெயரை பிரேம் நசீர் என்று மாற்றினார் திக்குரிசி சுகுமாரன். அதன் பிறகு இதே பெயரில் 600 படங்களுக்கு மேல் நடித்தார்.
"விசப்பிண்டே வலி" படத்தை மோகன் ராவ் இயக்கினார். கே.வி.கோஷி, குமாரி தங்கம், பங்கஜவல்லி, நானுகுட்டன், மாதப்பன், எஸ்.பி.பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் "பசியின் அழைப்பு" என்ற பெயரில் வெளியானது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!