
ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு
இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதபதி படத்தை பார்த்தார். பின்னர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் “மனுஷி படத்தில் கடவுள், அறிவியல் நம்பிக்கை, சித்தாந்தம், அடையாளம் ஆகியவை குறித்து வெளிப்படையான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளது. சென்சார் போர்டு நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காட்சிகளை நீக்க வேண்டாம். ஆனால் சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும். காட்சிகள், வசனங்களை மாற்றியமைத்து 2 வாரங்களில் சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். சென்சார் போர்டு 2 வாரங்களில் பரிசீலித்து உரிய சான்றிதழை வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!