பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆக 29, 2025
அ நிறம் | அளவு
Advertisement
"இரவுக்கு ஆயிரம் கண்கள்","கண்ணை நம்பாதே" போன்ற படங்களை இயக்கியவர் மு.மாறன். தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து "பிளாக் மெயில்" எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிந்து மாதவி நடித்துள்ளார். லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதியன்று திரைக்கு வருவதாக இருந்தது. ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர் ஆக., 22ல் வெளியிட முயற்சிகள் நடந்தன, ஆனால் நடக்கவில்லை. தற்போது இப்படம் வருகின்ற செப்டம்பர் 12ந் தேதியன்று திரைக்கு வருகிறது என புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!