
நடிகர் சங்க புதுகட்டடம் : விஜயகாந்த் பெயர் சூட்டப்படுமா
இந்நிலையில் இன்று விஜயகாந்த் 73 பிறந்தநாள் என்பதால் பலரும் நடிகர் சங்க கட்டடம், சங்கத்தை கடனில் இருந்து மீட்க அவர் நடத்திய போராட்டங்கள், வெளிநாடுகளில் நடத்திய கலை நிகழ்ச்சிகளை பற்றி பேசுகிறார்கள். புது நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக இருக்கிறது. இது குறித்து நடிகர் சங்க சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்று நடிகர் சங்க செயலாளர் விஷாலும் பேட்டி கொடுத்து இருக்கிறார். ஆகவே, அதில் பிரச்னை வராது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சிலர் நடிகர் சங்க இடத்தை வாங்க உதவிய எம்ஜிஆர், என்எஸ் கிருஷ்ணன் பெயரை, சங்கத்தின் சில பகுதிகளுக்கு சூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இப்போது பணிகள் விரைந்து நடக்க, நிதி உதவி, சட்டரீதியிலான உதவிளை செய்து வருபவர் துணை முதல்வர் உதயநிதி. அவர் மனசு குளிரும் வகையில் கருணாநிதி பெயரையும் எப்படியாவது, எங்கேயாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். ஆகவே, விஜயகாந்த், எம்ஜிஆர், கருணாநிதி பெயர்கள் நடிகர் சங்க கல்வெட்டில் இருக்கும். முகப்பில் விஜயகாந்த் பெயரில் சங்க கட்டடம் அமைய வாய்ப்பு என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!