
சிறிய படங்களுடன் விநாயக சதுர்த்தி ரிலீஸ்
அதேசமயம், ஆகஸ்ட் 27ல் கடுக்கா என்ற படம் மட்டும் வெளியாகிறது. ஆகஸ்ட் 29ம் தேதி சில சிறிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “அசுர மனிதன், கிப்ட், குற்றம் புதிது, நறுவீ, சொட்ட சொட்ட நனையுது, வீர வணக்கம், பேய்கதை " ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு மலையாளம், தமிழில் தயாராகி உள்ளதாக சொல்லப்படும் "பல்டி" படமும் அதே நாளில் வெளியாக உள்ளது.
இந்த வாரம் வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த வருடம் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 170ஐக் கடக்கிறது. இந்த வருடம் முடிய இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில் எப்படியும் 75 படங்களாவது வெளியாக வாய்ப்புள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!