
8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன்
இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு "சிங்கா" என்ற படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார். அவரது ஜோடியாக சிஜா ரோஸ் நடிக்கிறார். புதுமுகம் மீனாட்சி, ஆதித்யா கதிர், மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ருத்ரம் சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மனோஜ் சின்னசாமி இசையமைக்க, அசோக் குமார்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜா துரை சிங்கம் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது “மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக சிங்கா உருவாகி இருக்கிறது. கதையின் மையத்தில் இருக்கும் சிங்கா எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!