
டியூட் தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல்
"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவித்தார்கள். "டியூட்" படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். தெலுங்கு சினிமாவில் ஸ்டிரைக் நடந்ததால் "டியூட்" பட வேலைகள் முடியவில்லை. எனவே, அப்படம் தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சற்று முன்னர் அப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று மீண்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இன்று மாலை அப்டேட் வெளியிட உள்ளதாகவும் அறிவித்தனர். அதன்படி படத்தின் முதல்பாடலை வரும் ஆக., 28ல் வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளனர். ஊரும் பிளட் என்ற பெயரில் முதல் பாடல் வெளியாகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையைமக்கிறார்.
தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் இரண்டு படங்களான "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்" ஆகியவை ஏட்டிக்குப் போட்டியாக வெளியாக உள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!