
சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல்
சிம்புதாான் உயிருள்ளவரை உஷாவை வெளியிடுங்க என்றார். அந்த படத்தில் இடம் பெறும் கட் அடிப்போம் பாடல் மீது அவருக்கு அவ்வளவு ஆசை. அதை இப்போது ரீமிக்ஸ் செய்து இருக்கிறார். அடுத்து சிம்பு நடித்த இது நம்ம ஆளு, காதல் அழிவதில்லை படங்களை கூட ரீ ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளோம். எனக்கு விஜயகாந்த்துக்கும் அரசியல் ரீதியாக பிரச்னை வந்தபோது சிம்புதான் பேசி சமாதானப்படுத்தினார். அதிலிருந்து அரசியல் காரணமாக, எந்த நடிகர் நட்பை முறிக்க கூடாது என முடிவு செய்தேன். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது, இந்த மண்ணில்தான் எனக்கு எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். சிம்புதான் அமெரிக்க அழைத்து சென்று சிகிச்சை பெற வைத்தார்"" என்றார்.
சிம்பு திருமணம் குறித்து அவர் நேரடியாக பேசவில்லை. ஆனால், ""காதலுக்கு நான் எதிரி அல்ல என்று சொல்லிவிட்டு, அந்த காலத்தில் தன் படங்களின் பிலிமை தியேட்டருக்கு பெட்டிகளில் வைத்து அனுப்பும்போது அந்த பெட்டிக்குள் 500 ரூபாயை வைத்து அனுப்புவேன். அதை திறந்து பார்க்கும் ஆபரேட்டர் சந்தோசப்படுவார். படத்தை வாழ்த்துவார். பட பெட்டிகளில் சிம்பு கையால்தான் 500 ரூபாயை வைத்து அனுப்புவேன் என்றும் புது தகவல் சொன்னார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!