
ஜூலையில் 1400 கோடி வசூல் கடந்த இந்திய சினிமா
அதில் கடந்த மாதம் வெளியான படங்கள் மூலம் மட்டும் சுமார் 1400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கடந்த மாதம் வெளியான ஹிந்திப் படமான "சாயரா", அனிமேஷன் படமான "மகாஅவதார் நரசிம்மா", தெலுங்குப் படமான "ஹரிஹர வீரமல்லு", தமிழ்ப் படமான "தலைவன் தலைவி", கன்னடப் படமான "சு பிரம் சோ" ஆகிய படங்கள் இதில் குறிப்பிடப்பட வேண்டியவை.
அவற்றோடு ஹாலிவுட் படங்களான "ஜூராசிக் வேர்ல்டு ரிபர்த், சூப்பர்மேன், தி பன்டாஸ்டிக் போர் - தி பர்ஸ்ட் ஸ்டெப்ஸ், எப் 1 ஆகிய படங்களும் இந்தியாவில் நல்ல வசூலைக் கொடுத்துள்ளன.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் கடந்த ஜுலை மாதத்தில் வெளியான 24 படங்களில் "தலைவன் தலைவி" படம் மட்டும் 80 கோடி வசூலைக் கடந்து வெற்றிப் படமாக அமைந்தது. "3 பிஎச்கே, பறந்து போ, மாரீசன்" ஆகிய படங்கள் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றாலும் குறைந்த அளவிலான வசூலை மட்டுமே கொடுத்தன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!