
ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள்
அப்படிப்பட்டவர்களில் கொஞ்சம் பெரிய ஹீரோயின்கள் என்றால், அந்த காலகட்டங்களில் "கதை நாயகியாக" அதாவது, ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பது வழக்கம். சின்ன ஹீரோயின் என்றால் வில்லியாக, குணசித்திர ரோலில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். நடிகை அனுஷ்கா இப்போது காட்டி என்ற படத்தில் பக்கா ஆக் ஷன் ரோலில் நடித்து வருகிறார். இதில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணனும் இருக்கிறார்கள்
சிம்ரனும் தி லாஸ்ட் ஒன் படத்தில் ஆக் ஷனுக்கு மாறியிருக்கிறார். ரிவால்வர் ரீட்டாவில் கீர்த்தியும் துப்பாக்கி வைத்து சண்டைபோடுகிறார். ஆர்.கண்ணன் இயக்கும் காந்தாரி படத்தில் ஹன்சிகா கடுமையாக சண்டைபோட்டு இருக்கிறார். நயன்தாராவும், திரிஷாவும் திரில்லர், ஆக் ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பிக்கிறார்கள். சமீபத்தில் வெளியான உசுரே படத்தில் வில்லியாக நடித்தார் மந்த்ரா. விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்த ரெஜினா அந்த மாதிரி ரோலில் மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!