
அமெரிக்காவில் 6 மில்லியன் வசூலித்த கூலி
தமிழ்ப்படம் ஒன்று 6 மில்லியன் வசூலைக் கடப்பது இது மூன்றாவது முறை. இதற்கு முன்பு "ஜெயிலர்" படம் 6.8 மில்லியன் யுஎஸ் டாலர், பொன்னியின் செல்வன் 1, 6.5 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து முதல் இரண்டு இடங்களில் உள்ளன. தற்போது, "கூலி" வசூல் 6 மில்லியன் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
2.0 படம் 5.4 மில்லியன் வசூலுடன் 4வது இடத்திலும், "லியோ" படம் 5.2 மில்லியன் வசூலுடன் 5வது இடத்திலும் உள்ளன.
"கூலி" படம் கடந்த நான்கு நாட்களில் உலக அளவில் 44 மில்லியன் யுஎஸ் டாலரை வசூலித்துள்ளது. இது ஹாலிவுட் படமான "வெப்பன்ஸ்" படத்தை விடவும் சற்றே அதிகமான தொகை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!