
பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி
"போலீஸ் பேமிலி" படத்தின் முதல் பார்வையை இயக்குனர்கள் சசிகுமார், பாண்டியராஜ், நடிகர்கள் பருத்திவீரன் சரவணன், வெற்றி, காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
கதை குறித்து படக்குழு கூறுகையில், ‛‛சஸ்பென்ஸ், திரில்லர் எமோஷன் கலந்து இருக்கும் படம் இது. ஒரு போலீஸ் ஸ்டேஷனில் எப்படி பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு வரக்கூடிய சில எதிர்ப்புகள் பிரச்னைகளால் அவர்களுடைய குடும்பம் எப்படி தொந்தரவுக்கு ஆளாகிறது, அதை எப்படி அவர்கள் சாதுரியமாக கையாண்டு, மீண்டு வருகிறார்கள், அதில் என்ன இழப்பைச் சந்திக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால் இந்த "போலீஸ் பேமிலி" என்கிற டைட்டில் அதுவாகவே கதையைத் தேடி வந்துவிட்டது.. படம் பார்க்கும்போது கதையில் அதற்கான நியாயம் இருப்பதை உணர முடியும் "" என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!