தமிழ் ரசிகர்கள் திறமையை அங்கீகரிப்பவர்கள் : அர்ஷா பைஜு
ஆக 13, 2025
Advertisement
மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார் அர்ஷா பைஜூ. "பதினெட்டாம் படி" படத்தில் அறிமுகமான அவர் "முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்" உள்பட பல படங்களில் நடித்துள்ளார். "ஹவுஸ் மேட்ஸ்" படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகமானார். படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அர்ஷா.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மலையாள சினிமாவில் பல படங்களில் நாயகியாக நடித்தாலும், தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருந்தேன். எனது ஆசை தற்போது "ஹவுஸ் மேட்ஸ்" படம் மூலம் நிறைவேறி இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் திறமைக்கு மதிப்பளிக்கிறார்கள். "ஹவுஸ் மேட்ஸ்" படத்திற்கு கிடைத்த வரவேற்பு உற்சாகத்தை தந்தது. நிச்சயம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பிடிப்பேன், என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. மலையாள சினிமா, தமிழ் சினிமா இரண்டுக்கும் பெரிய வித்தியாசமோ, வேறுபாடோ இல்லை. தமிழ் சினிமாவில் திறமைகள் அங்கீகரிக்கப்படுகிறது. தமிழ் சினிமா மீது எனக்கு மிகப்பெரிய காதல் உண்டு. நான் நடனக் கலைஞர், மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் என்பதால், நடனம் மற்றும் இசையை மையமாக கொண்ட கதைக்களத்தில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை"" என்கிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!