
கூலி, வார் 2 டிக்கெட் கட்டண உயர்வுக்கு தெலுங்கு திரையுலகினர், ரசிகர்கள் எதிர்ப்பு
நாளை மறுதினம் ரஜினிகாந்த், நாகார்ஜுனா நடித்துள்ள தமிழ்ப் படமான "கூலி", ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள ஹிந்திப் படமான "வார் 2" ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்கான முன்பதிவு இன்னும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஆரம்பமாகவில்லை.
நேரடி தெலுங்கு படங்களைப் போல இந்த டப்பிங் படங்களுக்கும் டிக்கெட் கட்டண உயர்வுக்காக விண்ணப்பம் செய்துள்ளார்களாம். இது தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் படங்களுக்கு எதற்காக டிக்கெட் கட்டண உயர்வு தர வேண்டும் என்று சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர்களான நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடித்திருந்தாலும் அனுமதி அளிக்கக் கூடாது என்கிறார்களாம்.
சென்னை, மும்பையை விட ஐதராபாத், விசாகப்பட்டிணம் என தெலுங்கு நகரங்களில் டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஏன் அனுமதி தர வேண்டும் என சமூக வலைத்தளங்களிலும் சில தெலுங்கு சினிமா ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.
டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் அனுமதி அளிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!