
சன்னிதானம்(P.O) : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர்
வலுவான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டு, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவம் மற்றும் அதை தொடர்ந்து அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த படத்தின் கதை பேசுகிறது. படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு அய்யப்பன் எழுதியுள்ளார். அருண் ராஜ் இசையமைக்க, அமுதசாரதி இயக்கியுள்ளார்.
தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக "சன்னிதானம்(P.O)" வெளியாக உள்ளது. யோகிபாபுடன் ரூபேஷ் ஷெட்டி, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!