
28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி
இந்த படத்தில் மந்திரவாதி மாதிரியான மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார் முன்னாள் கவர்ச்சி நடிகையான டிஸ்கோ சாந்தி. பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து ஐதராபாத்தில் செட்டில் ஆனவர். பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தவர், 28 ஆண்டுகளுக்குப் புல்லட்டில் நடித்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் புல்லட் படம் ரிலீஸ் ஆக உள்ளது சாம் சி.எஸ். இசையமைக்க, "டிமான்டி காலனி", "டைரி" உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். அருள்நிதி நடித்த டைரி படத்தை இயக்கியவர் இன்னாசி பாண்டியன்.
மறைந்த பிரபல ஹீரோ ஆனந்தன் மகள் தான் டிஸ்கோ சாந்தி. இவரின் சகோதரிதான் பிரகாஷ்ராஜ் முன்னாள் மனைவியான லலிதாகுமாரி. டிஸ்கோ சாந்தி கணவரான நடிகர் ஸ்ரீஹரி 2013ல் காலமானார். 1997க்குபின் டிஸ்கோசாந்தி நடிக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!