
20 மில்லியன் பார்வைகளைக் கடந்த கூலி டிரைலர்
24 மணி நேரத்தில் ரஜினியின் முந்தைய சாதனையான "ஜெயிலர்" டிரைலரின் சாதனையை இப்பட டிரைலர் முறியடித்தது. விஜய்யின் 24 மணி நேர டிரைலர் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. தற்போது "கூலி" தமிழ் டிரைலர் 20 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்துள்ளது.
ஹிந்தி டிரைலர் 2 யு டியூப் தளங்களில் 9 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 7 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. நேற்று மாலை இப்படத்தின் கன்னட டிரைலர் வெளியாகி அது 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
"கூலி" படத்தின் பாடல்களில் "மோனிகா" தமிழ் பாடல் 59 மில்லியன் பார்வைகளையும், தெலுங்குப் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. மற்ற பாடல்களை விடவும் இந்தப் பாடலுக்கு அதிக வரவேற்பு உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!