
கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல்
இந்நிலையில் படத்தின் இடைவேளை திருப்புமுனையாக, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளை காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை. அதை நான் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கேரளாவில் முன்பதிவு அமோகம்
இதனிடையே கேரளாவில் இன்று காலை 11 மணிக்கு கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்த்துள்ளன. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் ரஜினியின் கூலி படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் படம் கேரளாவில் 50 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!