
மழை பிடிக்காத மனிதன் : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன்
படம் வெளியான போதே ஒரு சர்ச்சை எழுந்தது. படத்தின் ஆரம்பத்தில் இடம் பெற்ற ஒரு நிமிடம் ஓடக் கூடிய அறிமுகக் காட்சி ஒன்று தனக்குத் தெரியாமல் படத்தில் சேர்த்துள்ளதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் அப்போது குற்றம் சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அந்த அறிமுகக் காட்சி நீக்கப்பட்டது.
அந்தக் காட்சியை படத்தின் நாயகன் விஜய் ஆண்டனி சேர்த்தாரா அல்லது தயாரிப்பாளர்கள் சேர்த்தார்களா என்ற சர்ச்சை எழுந்தது. சில நாட்களில் அது நீக்கப்பட்டதாலும், படமும் தியேட்டர்களில் ஓடாததாலும் சர்ச்சையும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த சர்ச்சையை மீண்டும் நினைவூட்டியுள்ளார் இயக்குனர் விஜய் மில்டன். "ராஞ்சனா" படத்தின் ரீ-ரிலீஸில் ஏஐ மூலம் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை மறுபதிவு செய்து, “மழை பிடிக்காத மனிதன்" படத்திற்கும் இதுதான் நடந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!