
தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன்
அதை "புஷ்பா" பட எக்ஸ் தள கணக்கில், "புஷ்பா" பாடலுக்குத்தான் அவர்கள் நடனமாடினார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்தாமல், "புஷ்பா" பாடல் என்றே குறிப்பிட்டு, "உலகளாவிய நிகழ்வு" எனப் பெருமையாகப் பகிர்ந்திருந்தார்கள். அல்லு அர்ஜுனும் அதை உண்மை என்று நினைத்து, "வாவ் மைண்ட் ப்ளோயிங்" என கமெண்ட் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
ஆனால், ரசிகர்கள் "புஷ்பா" பாடலுக்கு அந்த நடனக்குழுவினர் நடனமாடவில்லை. அவர்கள் நடனமாடிய பாடல் வேறு பாடல் என ஒரிஜனல் வீடியோவை எடுத்து பகிர்ந்துள்ளனர். இருந்தாலும் அல்லு அர்ஜுன், புஷ்பா எக்ஸ் தள கணக்கு ஆகியவை தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளவில்லை.
"பி யுனிக் க்ரூ" புஷ்பா பாடலுக்கு நடனமாடவில்லை என்றாலும் அவர்கள் நடனமாடியது உண்மையிலேயே மிரள வைத்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!