
விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி
இந்நிலையில் பார்க்கிங் படக்குழுவினரை அழைத்து நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த போட்டோக்களை பகிர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட பதிவில், ‛‛விருதே வாழ்த்திய தருணம். ஒரு நண்பன் போல பேசினீர்கள். அவருடனான(எம்எஸ் பாஸ்கர்) உங்கள் நட்பை பற்றி பேசினீர்கள். உரையாடலா அல்லது யூனிவர்சிட்டி பாடமா. கற்றது பல.. கற்க வேண்டும் உங்களிடம் இருந்து பற்பல. மிகச்சிறந்த புத்தகத்தை படித்த ஒரு கர்வம் அங்கிருந்து விடை பெற்றபொழுது. எங்களை அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி கமல் சார், லவ் யூ சார்"" என குறிப்பிட்டுள்ளார்.
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!