
அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி பட டிரைலர்
படத்தின் பிரதான வில்லனாக நாகார்ஜுனா நடித்துள்ளார். அவரின் குரலோடு தான் டிரைலர் துவங்குகிறது. சர்வதேச அளவில் சட்டத்திற்கு புறம்பாக நாகார்ஜுனா மற்றும் அவரது குழுவினர் ஏதோ ஒரு தொழிலை செய்கின்றனர். அவர்களை உளவு பார்க்கும் அண்டர் காப்பாக சத்யராஜ் நடித்திருப்பார் என தெரிகிறது. இவருக்கு ஒரு பிரச்னை வர ரஜினி என்ட்ரியாக எதிரிகளை துவம்சம் செய்வது போன்று கதை இருக்கும் என டிரைலரை பார்க்கையில் யூகிக்க முடிகிறது.
டிரைலரில் படத்தில் வரும் பிரதான நடிகர்களான சத்யராஜ் அவரின் மகளாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகிர் மற்றும் சிறப்பு ரோலில் வரும் அமீர்கான் கூட வந்து போகிறார்கள். டிரைலர் முழுக்க முழுக்க ஆக் ஷன் காட்சிகள் தான் நிறைந்து உள்ளன. அதோடு படத்தின் மைய கருவாக விலையுர்ந்த கை கடிகாரம் மற்றும் துறைமுகம் சார்ந்த விஷயங்கள் இருக்கும் என தெரிகிறது. அதுதொடர்பான காட்சிகளும் டிரைலரில் உள்ளன.
டிரைலர் வெளியான 10 நிமிடங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்று வலைதளங்களில் டிரெண்ட் ஆகின. ரஜினியின் முந்தைய படங்களின் டிரைலர் சாதனையை மற்றும் தமிழ் படங்களின் டிரைலரில் புதிய சாதனையை கூலி பட டிரைலர் படைக்கும் என எதிர்பார்க்கலாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!