
36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு ஏ சான்றிதழ்
ரஜினிகாந்த் நடித்து கடைசியாக 1989ம் ஆண்டு வெளிவந்த "சிவா" படத்திற்கு "ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு கடந்த 36 ஆண்டுகளாக அவரது படங்களுக்கு அந்த சான்று கிடைத்ததில்லை. குடும்பத்துடன் பார்க்கும்படியாக "யு" சான்றிதழ் படங்கள்தான் இருந்தது. ஒரு சில படங்கள் "யு/ஏ" சான்று பெற்றவை.
"கூலி" படத்திற்கு "ஏ" சான்றிதழ் என்பதால் வசூலும் குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகளை வீட்டில் விட்டு படம் பார்க்க வருவதற்கு பெண்கள் தயங்குவார்கள். ஆண்கள் மட்டுமே தியேட்டர் பக்கம் வந்தால் வசூல் அதிகம் கிடைக்காது. இதனால், ரஜினி ரசிகர்கள் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பி "யு-ஏ" சான்றிதழாவது பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!