
‛விஸ்வாம்பரா படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய்
ஜூலை 25, 2025
Advertisement
போலோ சங்கர் படத்தை அடுத்து தற்போது விஸ்வாம்பரா மற்றும் தனது 157வது படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு பாடலுக்கு தமன்னா நடனமாடிய நிலையில், தற்போது இன்னொரு பாடலுக்கு அவருடன் இணைந்து பாலிவுட் நடிகை மவுனி ராய் நடனமாடுகிறார். இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை, இந்த சிறப்பு பாடல் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இப்படத்தை தயாரித்து வரும் யுவி கிரியேஷன்ஸ் அறிவிக்க உள்ளது.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!