
ஆக., 2ல் ‛கூலி பாடல் வெளியீட்டு விழா : கமல் வருவாரா...!
இப்போதைய நிலரவப்படி ஆகஸ்ட் 2ம் தேதி கூலி பாடல் வெளியீட்டுவிழா பிரம்மாண்டமாக நடக்கிறது. அதில் ரஜினிகாந்த் மற்றும் படத்தில் நடித்த சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். ரஜினியின் 50வது ஆண்டு சினிமா பயணத்தில் இந்த விழா நடப்பதால் பிரமாண்டமாக நடக்க உள்ளது. ரஜினியும் பல முக்கியமான விஷயங்களை பேசப்போகிறார் என்கிறார்கள்.
மோனிகா பாடல் மூலம் மஞ்சும்மேல் பாய்ஸ் சவுபின் ஷாகீர் இன்னும் பிரபலமாகிவிட்டதால் அவர் கண்டிப்பாக விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று படக்குழு விரும்புகிறதாம். முதன்முறையாக ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார் கமல் மகள் ஸ்ருதிஹாசன். இந்த விழாவுக்கு கமல்ஹாசன் வருவாரா என்பது பலரின் ஆர்வமாக இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!