
லியோ பிளாஷ்பேக் விமர்சனம், நானே முழு பொறுப்பு : லோகேஷ் கனகராஜ்
அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் லோகேஷ். “விஜய் படம் என்றாலே ஒரு "இன்ட்ரோ சாங்" கண்டிப்பாக இருக்கும். ஆனால், "லியோ" படத்தில் அப்படி எதுவும் வைக்க முடியவில்லை. அப்படியான ஒரு பாடல் வேண்டும் என்று தயாரிப்பு தரப்பிலும் மார்க்கெட்டிங் தரப்பிலும் கேட்டார்கள். அதனால், இரண்டாவது பாதியில் பிளாஷ்பேக்கை ஒரு பாடலுடன் ஆரம்பித்திருப்பேன்.
பிளாஷ்பேக் 30 நிமிடங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அப்படி வைத்தால் படத்தின் நீளம் அதிகமாக வந்துவிடும் என்பதால் அதை 18 நிமிடங்களாகக் குறைத்தேன். அதனால்தான் அதற்குக் கலவையான விமர்சனங்கள் வந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிளாஷ்பேக்கில் இடம் பெற்ற "நான் வரவா" பாடலும் புகை பிடிப்பது, மது அருந்துவது பற்றிய வரிகளாக இருந்ததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் படத்தின் நெகட்டிவ் விமர்சனத்திற்கு ஒரு காரணமாக இருந்தது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!