
இப்போதே ரூ.25 கோடி அள்ளிய ஹரிஹர வீரமல்லு
இப்படத்தின் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். தற்போது வரை முன்பதிவு மூலம் மட்டுமே 25 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாக டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தின் மொத்த தியேட்டர் வியாபாரம் சுமார் 120 கோடி என்று தகவல். 130 கோடி வரை வசூலித்தால் படம் லாபக் கணக்கை ஆரம்பித்துவிடும். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இப்படத்திற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தி தரப்பட்டுள்ளதால் முதல் வார வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் பவன் கல்யாணுக்கு இது ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படும்.
படம் ஓட வேண்டும் என்பதற்காக தனது துணை முதல்வர் வேலைகளை சற்றே தவிர்த்துவிட்டு கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார் பவன் கல்யாண்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!