
பேதங்களை மறந்து திறமைக்கு வாய்ப்பளிக்கும் தமிழ் சினிமா: ஷில்பா மஞ்சுநாத்
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது: நான் கர்நாடகாவை சேர்ந்தவள் என்றாலும், எனக்கு வாய்ப்பு தந்து அழகுபார்த்த இந்த மண்ணுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். நடிக்க வந்த புதிதில் எனக்கு தமிழ் தெரியாது. நடிப்பும் சரியாக வரவில்லை. இன்னொரு மாநிலத்தை சேர்ந்தவள் என்றாலும், என் திறமையை மதித்தார்கள்.
தமிழ் சினிமாவில் மட்டும்தான் பேதங்களையும் கடந்து திறமைக்கு மதிப்பு தருகிறார்கள். அந்தவகையில் தமிழ் ரசிகர்களுக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை ஈர்ப்பேன். தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தமிழ் திரையுலகத்திற்கு நன்றி. "காளி", "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்", "சிங்க பெண்ணே" என தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து தமிழில் நடிப்பேன். என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!