
தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை முதல் பாடல்
ஜூலை 21, 2025
Advertisement
நடிகர் தனுஷ் தற்போது "இட்லி கடை" எனும் படத்தை இயக்கி, நடித்துள்ளார் . இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். "டான் பிக்சர்ஸ், வுன்டர்பார் பிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ்" ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வரும் அக்டோபர் 1ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்திலிருந்து முதல் பாடல் வருகின்ற ஜூலை 28ம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு அதற்கு முந்தைய நாளான ஜூலை 27ம் தேதியன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!