
காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ
பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், "ஆடுகளம்" கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி உட்பட பலர் நடிக்கிறார்கள். "பூவே உனக்காக" படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா இதில் முக்கியமான வேடத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். முதற்பாகம் போலவே இதுவும் திரில்லர் பின்னணியில் நகர்கிறது. விடுதலை படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த பவானிஸ்ரீ, காளிதாஸ் 2வில் போலீசாக வருகிறார். சில ஆண்டுகளாக வெற்றிக்காக காத்திருக்கும் பரத் இந்த படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!