
2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர் கதை
2040ல் வரும் பிரச்னையை ரெட் பிளவர் என்ற ஆர்மி எப்படி தடுக்கிறது என்ற ரீதியில் கதை உருவாகி உள்ளது. அப்போதைய காலத்தில் பிரதமராக ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்.
மேலும் இந்த பட விழாவில் பேசிய விஷால் ""இயக்குனர் சுராஜிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும் என்றார். ஏன் என்று பலரும் புருவம் உயர்த்த இதற்கு அவரே விளக்கமும் கொடுத்தார். ""எனக்கு தெரிந்த பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், டாக்டர்கள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தினமும் அதிக டென்ஷனுடன் வேலை பார்ப்பார்கள். இரவு படுக்கும்முன்பு தங்கள் டென்சனை குறைக்க, காமெடி சேனல்களைதான் பார்க்கிறார்கள். அதில் சுராஜ் நடித்த பல படங்கள் இடம் பெறுகின்றன. அதனால் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும்."" என்றார்.
தலைநகரம், மாப்பிள்ளை, படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கியவர் சுராஜ். விஷால் நடித்த கத்திசண்டை படத்தையும் இயக்கியவர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!