
‛புதிய பயணம்... : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்
அரசியல் ரீதியாக இருவருக்கும் மாற்றுக் கருத்து இருந்தாலும், இப்போதும் அவர்கள் இருவரும் நண்பர்களாகவே இருக்கிறார்கள். ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதாக அறிவித்து பின்னர் பின்வாங்கினார். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தனியாக நின்று, தற்போது திமுக கூட்டணியில் உள்ளார்.
கடந்த வருடம் நடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது நடந்த பேச்சு வார்த்தையின்படி ராஜ்யசபா எம்.பி சீட் ஒன்று திமுக சார்பில் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அடுத்த வாரம் அவர் பதவியேற்க உள்ள நிலையில் தனது நீண்ட கால நண்பர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து தனது சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றுள்ளார்.
“புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன், மகிழ்ந்தேன்,” என இது குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
‛‛மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் கமலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்"" என நடிகர் ரஜினி பதிவிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!