
கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி
லோகேஷ் கனகராஜ் கூறுகையில், கூலி படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. நாங்கள் அவரை ரொம்பவே மிஸ் பண்ணி வருகிறோம். என்றாலும் இந்த படம் குறித்த சில தகவல்களை அவரிடத்தில் தெரிவிக்க அவ்வப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வருகிறேன். கூலி படத்தின் டப்பிங்கை பேசி முடித்துவிட்டு என்னை கட்டி அணைத்து பாராட்டினார் ரஜினி. இந்த படம் இன்னொரு தளபதி போல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் சொன்ன இந்த வார்த்தை ஒட்டுமொத்த கூலி படக்குழுவுக்கும் எனர்ஜியை கொடுத்திருக்கிறது என்கிறார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!