
நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ்
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் பேசுகையில், “நானும், அனிருத்தும் இத்தாலி நடிகையான மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள். பாடல்கள் என்று வரும் போது, அது முழுக்க முழுக்க அனிருத்தின் முடிவு. நான் அவரை முழுமையாக நம்புகிறேன். மோனிகா பெலூசியின் உலகளாவிய கவர்ச்சிக்கு இந்தப் பாடல் ஒரு அர்ப்பணிப்பு. பூஜா ஹெக்டேவின் சிவப்பு நிற உடை, "மலேனா" மற்றும் "ஸ்பெக்டர்" படங்களில் மோனிகாவின் அடையாளமாக இருந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது யு டியுப் தளத்தில் இந்தப் பாடல் தமிழில் 12 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!