
4000 கோடி செலவில் ராமாயணா படம்!!
இப்படத்தின் தயாரிப்பாளரான நமித் மல்கோத்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் இரண்டு பாகங்களின் பட்ஜெட் 4000 கோடி என தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலக வரலாற்றில் இத்தனை கோடி செலவு செய்து இதுவரையில் எந்த ஒரு திரைப்படமும் எடுக்கப்பட்டதில்லை.
இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை இந்த விஎப்எக்ஸ் காலத்தில் திரைப்படங்களாக உருவாக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஏற்கெனவே அவை முந்தைய காலகட்டங்களில் பலரால் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகத்தில் இதற்கு முன்பு அதிக பட்ஜெட் படங்களாக "கல்கி 2898 ஏடி" படத்தின் இரண்டு பாகங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் பாகம் வெளிவந்த நிலையில் அதன், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாக வேண்டி உள்ளது.
"ராமாயணா" படத்தின் பட்ஜெட் 4000 கோடி என்பது ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!