
சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள்
ஆனால், தமிழ் சினிமா உலகில் வழக்கம் போல சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர். வழக்கம் போல பலர் எந்தவிதமான இரங்கலையும் தெரிவிக்கவில்லை. திரையுலகில் தங்களது சக மூத்த நடிகை ஒருவர் இறந்தது குறித்து அவர்கள் எதுவுமே இரங்கல் தெரிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் என பலரும் ஒரு வரி இரங்கல் கூட அவர்களது சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை. இத்தனைக்கும் "ஒன்ஸ்மோர்" படத்தில் சரோஜாதேவியுடன் நடித்திருக்கிறார் விஜய்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம் பிரபு, சத்யராஜ், டி ராஜேந்தர், சிவக்குமார், சரத்குமார், குஷ்பு, சிம்ரன், கவுதமி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டவர்கள் மட்டுமே இரங்கல் தெரிவித்திருந்தனர். நேற்று தன்னுடைய பிறந்தநாளாக இருந்தாலும் அதற்கான கொண்டாட்டத்தை ரத்து செய்துவிட்டு, இரங்கலும் பதிவிட்டிருந்தார் சரத்குமார்.
இது போன்று முக்கியமான நடிகர்கள், நடிகைகள் மறைவுக்கு பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவிக்காமல் இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு சினிமா ரசிகருக்கு இருக்கும் துயரம் அவர்கள் துறை சார்ந்தவர்களுக்கு வராதது ஆச்சரியம்தான்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!